“வரைவு தேசியக் கல்விக்கொள்கை 2019’’ தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட முதற்பிரதியை தி.க.தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஐ.யு.எம்.எல் தலைவர் கே.என்.காதர் மொய்தீன், மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமுமுக துணைப்பொதுச் செயலாளர் ஜெ.ஹாஜாகனி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.