tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

கரூர், அக்.22- தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூரில் செவ்வாயன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 20 சத வீதம் போனஸ் வழங்குவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 206.52 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். 

அதனடிப்படையில் போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றக் கூடிய சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை முதல் 20 சதவீதம் போனஸ் வழங்கப் படும். இதில் அதிகபட்சமாக ரூபாய் 16 ஆயிரத்து 800 வரை தொழிலாளருக்கு  போனஸ் கிடைக்கும். மேலும் தீபாவளி முன்பணம் ரூபாய் 10  ஆயிரம் இன்று  முதல் 8 போக்குவரத்துக் கழகங்களி லும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து ஏற்பாடும் செய்து வருகின்ற னர். தினசரி செல்லும் பேருந்துகள் சேர்த்து சிறப்பு பேருந்துகள் 21 ஆயிரத்து 586 இயக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் பயணிகள் எவ்வித சிரமும் இன்றி பயணங்களை மேற் கொள்ளலாம் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.