tamilnadu

img

பிரதமரின் விமானத்துக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்

புதுதில்லி, அக். 28- சவூதி அரேபியப் பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் மோடியின்  விமா னம் பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான ஐசிஏஒ(ICAO) விடம் இந்தியா புகார் அளித்துள்ளது. இந்த அமைப்பின் விதிகளின் படி சர்வதேச அளவில் விமானங்கள் வேறு நாடுகளின் வான்பரப்பில் பறப்பதற்கு அனுமதி கோருவதும், அனுமதி வழங்கப்படு வதும் வழக்கமான நடைமுறை என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய விமானங்கள் பறப்பதற்கு வான்பரப்பை மறுத்துவருகிறது. இது சர்வதேச விதிகளை மீறுவதாகும் என்று இந்தியா சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் இந்த முடிவு குறித்து வருந்துவதாகவும் அந்த புகாரில் இந்தியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானத்திற்கும் பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது.  பிரதமர் மோடி ஐ.நா.சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க பயணித்தபோதும், பாகிஸ்தான் வான்பரப்பில் பிரதமரின் விமானம் செல்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டது.

;