tamilnadu

img

மருத்துவமனையில் தீ 8 குழந்தைகள் பலி

அல்ஜீயர்ஸ், செப்.24- அல்கேரியா நாட்டின் அல்ஜீயர்ஸ் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி செவ்வாயன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென தீ பற்றியது. தீ மளமள வென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தன. இந்த விபத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்தன என மருத்துவமனை அதிகாரி கள் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 11 குழந்தை கள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 28 மருத்துவ மனை ஊழியர்கள் உள்பட பலரை தீயணைப்பு படை யினர் பத்திரமாக மீட்டனர். தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த, பிரதமர்  மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

;