tamilnadu

img

​​​​​​​இந்தியாவில் 50 ஆண்டுகளில் நாலறை கோடி பெண்கள்  மாயம்

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் நாலறை கோடி பெண்கள்  மாயமாகி உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 
உலக மக்கள் தொகை நிலவரம் குறித்து ஐ.நா மக்கள் தொகை நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில்,  6 கோடியே 10 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளது. கடந்த  50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு (2020) கணக்கிட்டின்படி, மொத்த  எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக அதிகரித்து உள்ளது. 
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகை நிலவரத்தில் 2வது இடத்தில் உள்ள  இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு 2017-ம் ஆண்டுவரை, ஆண்டுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் பெண் குழந்தைகள், பிறப்பிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். கருவிலேயே அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல நாடுகளில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்படுதல் போன்ற காரணங்களால்  ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.  இதனால், குழந்தை திருமணங்கள் பெருக வாய்ப்பு  என ஐ.நா மக்கள் தொகை நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
உலகம் முழுவதும் திருமணம் ஆகாத ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  2050-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில், பெண் குழந்தைகளை விட  ஆண்கள் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;