காத்மாண்டு, ஜூலை 14- நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படை யினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற னர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சை க்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் சிக்கி 43 பேர் பலியாகியுள் ளனர். 20 பேர் காயமடைந்தனர். மேலும் 24 பேரை காணவில்லை என்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.