tamilnadu

img

சொத்தை விற்று கடன் அடைக்கும் "ஜி" நிறுவனம்

தில்லி 
 வடஇந்திய மொழிகளில் முன்னணி தொலைக்காட்சி சேனலாக வலம் வரும் "ஜி"  (ZEE) எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஹிந்தியில் ஹிட் அடிக்கும் சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து தற்போது தமிழகத்தை கலக்கி வருகிறது. தற்போது தமிழக குடும்ப பெண்கள் விரும்பி பார்க்கும் சேனல்களில் சன் தொலைக்காட்சிக்கு அடுத்த இடத்தில் இருப்பது "ஜி தமிழ்" தொலைக்காட்சி தான். அந்தளவுக்கு தமிழ்நாட்டில் வலுவாக காலூன்றி வளர்ந்துவரும் நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஒரு சோகமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.  

மோடி அரசின் திடமில்லாத செயலால் இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் ஒவ்வொரு அடியாக கீழிறங்கி ஆழ்துளை கிணற்றில் கிடக்கிறது. இதனால் பல்வேறு தொழில் துறை நஷ்டத்தில் கவிழ்ந்து வருகின்றன. சில்லறை வணிகம் முதல் சாப்ட்வேர் துறை என அனைத்தும் அச்சாணி இல்லாத சக்கரம் போல தள்ளாடி தான் கல்லாப்பெட்டியை துடைத்து வருகிறது.  இதே பாதிப்பில் தான் "ஜி" நிறுவனமும் சிக்கியுள்ளது. "ஜி" நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா தனது கடன்களை அடைக்க சொத்துக்களை (பங்குகளை) விற்று வருகிறார். பங்குச் சந்தையிலும் ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன பங்குகளின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது.விளம்பர வருவாய் மூலம் நன்றாக கல்லா கட்டும் "ஜி" தொலைக்காட்சிக்கே இந்த நிலைமை என்றால் நடுத்தர கேபிள் லோக்கல் தொலைக்காட்சிக்கு என்ன நிலைமை உருவாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

;