tamilnadu

img

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 512  உயர்வு


தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ512 உயர்ந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. இதனால் உள்நாட்டிலும் தங்கத்தில் விலையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ25,176 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ512 உயர்ந்துள்ளது. 
22 கேரட் தங்கம் 
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,211 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
24 கேரட் தங்கம்
தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,367 ஆகவும், சவரனுக்கு ரூ.26,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
 

;