tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் வரும் மே 18-ஆம் தேதி நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மோரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மோரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், நாடாளுமன்ற தேர்தல் வரை அவருக்கு சிக்கல் இல்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.  

மேலும், ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக கடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 


;