அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி பட பாணியில் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், மல்யுத்த வீரர் ஒருவரின் உடலுக்கு, வடிவேலுவின் முகம் பொருத்தி ஓவியம் வரைவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த பாணியில் புகைப்படம் ஒன்றை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், நேற்று டுவீட் செய்துள்ளார். ராக்கி என்ற ஆங்கில திரைப்படத்தில் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அத்திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் உடலில், டிரம்ப் தனது தலையை பொருத்தி போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நெட்டிசன்கள் பல யூகங்களை முன் வைக்கின்றனர்.
அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது இந்த கரணம் தான். அதாவது அண்மையில் டிரம்ப் அரசு மருத்துவமனை ஒன்றிற்கு சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார். இதை அடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதனை அடுத்து தனது உடல்நலம் குறித்த பேச்சை திசை திருப்பவே, விளக்கம் எதுவும் அளிக்காமல் கட்டுமஸ்தான உடலமைப்புடன் தனது முகத்தை பொருத்தி போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.