அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 உள்ளிட்ட விசாக்களை நடப்பு ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
உலகளவில் கோவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது. இந்த நிலையில், அங்கு் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார். ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு ஜூன் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த உத்தரவால் அமெரிக்காவுக்குள் வேலை நிமி்த்தமாக ஹெச்-1பி விசா, எல்1 விசா, ஜே விசா, ஹெச்-2பி, ஹெச்-4பி விசா மூலம் வருபவர்கள் இந்த ஆண்டுவரை தடை செய்யப்படுவார்கள். மேலும், அதிகமான ஊதியத்தில் ஹெச்-1பி விசாவில் வரும் அத்தியாவசியமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சி, ஆசிரியர், கவுன்சிலர், கோடைகால பணித் தி்ட்டம் ஆகிய பணிகளுக்கான ஜே விசாவில் வருவோருக்கும் இந்த தடை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.