tamilnadu

img

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்

உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஃபோப்ஸ் பத்திரிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 24 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ், கடந்த 2018-ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பேஜோஸ் வகித்து வந்தார். 

அண்மையில், பங்கு சந்தையில் 7 பில்லியன் டாலர் அளவுக்கு அமேசான் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அமேசான் நிறுவன பங்குகளும்  சரிவை சந்தித்தன. இதனால் பேஜோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக குறைந்தது.  இந்நிலையில், 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்ட பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். பேஜோஸ் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.