அமேதி:
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த போது, எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் என யாரையும் விட்டு வைக்காமல், இஷ்டத்திற்கு வசைபாடினார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த மனோஜ் காஷ்யப் என்ற இளைஞர், மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு இரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதிஅனுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் அவதூறு பேச்சுக்களுக்கு தடைவிதியுங்கள் என்று அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சிக்குவழி வகுத்தார். வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தார். பாஜக-வைச்சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட, ராஜீவ் காந்தியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரை, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த இளைஞர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.