திருச்சிராப்பள்ளி, ஜூலை 20- திருச்சி மாநகராட்சி 31, 32-வது வார்டு பகுதியில் 150 ஏக்கர் பரப்பள வில் மாவடிக்குளம் உள்ளது. இக்குளத்தில் முட்புதர்கள் மண்டி நிலத்தடி நீரை உலரச் செய்கின் றன. இதனால் பொன்மலை, திரு நகர், தென்றல் நகர், அமுல் நகர், காருண்யா நகர், விஐபி நகர், பழனி யப்பா நகர், ராமசாமி நகர், நோவா நகர், பொன்மலைப்பட்டி, கீழகல் கண்டார்கோட்டை உள்பட சுற்றுப் புற கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றி கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், மாவ டிக்குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டும். குளத்தின் கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்து, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன் மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், தென்னரசு, இருதயமேரி, தண்ணீர் அமைப்பு சதீஷ்குமார் ஆகியோர் பேசினர். டிஆர்இயுவினர், இயற்கை ஆர்வ லர்கள், தண்ணீர் அமைப்பினர், ஜன நாயக அமைப்புகள், ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.