அண்மையில் மறைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா இல்லத்திற்கு வியாழனன்று (டிச.24) சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கருப்பு கருணாவின் மனைவி செல்வி, மகள் சொர்ணமுகி, மகன் கௌசிகன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதல் கூறினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், பிரகலநாதன், வாசுகி, ராமதாஸ், நகரச் செயலாளர் ரவி, தமுஎகச மாவட்டச் செயலாளர் பாலாஜி, சிஐடியு மாவட்டச் செயலாளர் காங்கேயன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் லூர்துமேரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பரசன், தலைவர் பி.சுந்தர், விவசாயிகள் சங்கத் தலைவர் பலராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.