tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை நம்பி ஏமாற வேண்டாம்! மதுக்கூர் இராமலிங்கம் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஆக.7- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை எம்.என்.வி மகாலில் ‘புதிய கல்விக் கொள்கை-ஒரு பார்வை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  தஞ்சைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் தலைவர் சே. செல்வராஜ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியப் பொறுப்பாளர் முருக.சர வணன் வரவேற்றார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்க கிளைச் செயலாளர் மோரிஸ் அண்ணா துரை, இந்தியாவிற்கான மக்கள் இயக்க பட்டுக்கோட்டை கிளைச் செயலாளர் சி.திருஞானம், காப் பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் வ.சேதுராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசி யதாவது:  “மத்திய அரசு கொண்டு வந் துள்ள புதிய கல்விக் கொள்கை யால், வருங்கால தலைமுறைக்கு கல்வியே, கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. மேலும் கல்வித் துறைக்கும் மாநில அரசுக்கும் தொட ர்பு இல்லாமல் போய் விடும்.  போதிய கால அவகாசம் வழங் காமல், கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் யாருக் கும் தெரியாமல் ரகசியமாக நடத் தப்படுகிறது. கருத்துத் தெரிவிக்க செல்பவர்களும், அராஜகமான முறையில் காவல்துறையைக் கொண்டு வெளியேற்றப்படுகின்றனர்.  3-ம் வகுப்பு மாணவர்களும் அகில இந்திய நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய நிலை. மாண வர்களை மனச்சுமைக்கு ஆளாக்கி, கற்பதில் இருந்து வெளியே கொண்டு வரும் செயலாகத் தான் புதிய கல்விக் கொள்கை உள்ளது. எப்படிப்பட்ட தேசத்தில் வாழ்கி றோம் என்பதே அச்சமூட்டக் கூடி யதாக உள்ளது.  நாடாளுமன்றத்தில் உள்ள அசுர பலத்தை பயன்படுத்தி, பத விக்கு வந்த சில நாட்களிலேயே, தினசரி ஏழெட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கையை அறிமுகப் படுத்தி உள்ள எவருமே கல்வி யாளர்கள் இல்லை என்பதே வேத னையான உண்மை.  புதிய கல்விக் கொள்கை மீண் டும் குலக் கல்வி முறைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேக மும் இல்லை. லாபகரமாக இல்லாத பள்ளிகளை மூடச் சொல்கிறது. மாணவர் குறைவாக இருந்தால் அருகாமைப் பள்ளிகளோடு இணை க்கச் சொல்கிறது. 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி கற்க வேண்டும் என வற்புறுத்துகிறது. இந்திக்கு பாதை விரித்து, சமஸ்கி ருதத்தை கொண்டு வரும் திட்டம் தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக உள்ளது.  இந்திய அளவில் 14 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுதிய நீட் தேர் வில், வெற்றி பெற்றவர்கள் 9 லட்சம் பேர், இவர்களில் 66 ஆயிரம் பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. மற்றவர்களின் நிலை என்ன? நீட் தேர்வில் பல கோடி ரூபாய் பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது.  எம்பிபிஎஸ் படித்து தேர்வு பெற்றால் மட்டும் போதாது. நெஸ்ட் தேர்ச்சி பெற்றால் மட்டுமே டாக்ட ராக லைசென்ஸ் கிடைக்கும். இது  என்ன கொடுமை. இதை எதிர்த்து தான் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராடிக் கொண்டி ருக்கின்றனர்.  பள்ளி பாடத் திட்டங்கள் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வியில் மதவாதத்தை புகுத்தும் நிலை உருவாகியுள்ளது. இந்தி என்ற துண்டைப் போட்டு, சமஸ்கிருதத்துக்கு இடம் பிடிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தமிழ் மொழி காலப் போக்கில் அழிந்து விடும். முன்னோர் சொல் கசக்கும். பிறகு தான் இனிக்கும். அது போல புதிய கல்விக் கொள்கை நன்மை தரும் என நம்பி யாரும் ஏமாந்து விடாதீர்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.  ஆயுள் காப்பீட்டு கழக கிளைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.