சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வில், இதுவரை 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை தொடங்கினர். இதுவரை 8 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், 9-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அகழாய்வில் சுடுமண் பொம்மை, கண் மை தீட்டும் குச்சி, செம்பு கம்பி, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.