tamilnadu

img

மோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...

புதுதில்லி:

நாட்டில் தேர்தலை நடுநிலையோடு நடத்தவேண்டிய தேர்தல் ஆணையம், மக்களின் ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டிய தேர்தல் ஆணையம், மோடி

யின் பக்கம் நிற்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.


“2019 மக்களவைத் தேர்தல் நாட்டின் ஜனநாயக அமைப்பையே கேள்விக் குறியாக்கும் விதத்தில் நடந்து முடிந்தது, சரியல்ல.முன்னாள் தேர்தல் ஆணையர்கள் மட்டுமன்றி, தற்போதைய தேர்தல் ஆணையர் களில் ஒருவருமே, தேர்தல் நடைபெற்ற ‘லட்சணம்’ பற்றி கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். தற்போதைய தேர்தல் ஆணையத் தின் பெரும்பான்மையானது, நாட்டின் ஜனநாயகத்தின் பக்கம் நிற்பதற்குப் பதிலாக,மோடியின் பக்கம் நிற்பது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.