பிரதமர் மோடி தன்னை ‘சவுகிதார்’, அதாவது ‘காவலாளி’ என்று அழைத்துவருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி என்ற சவுகிதாரின்(?) அரசானது, இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) சவுகிதார்கள் நியமிப்பதில் ஊழல் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்திய உணவுக் கழகத்திற்கு தகுதியான காவலர்களை நியமனம் செய்வ
தற்கு, ‘ஏஸ் இண்டக்ரேட்டட் சொல்யூஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்திடம் கடந்த 2017-ஆம் ஆண்டு, ‘அவுட்சோர்சிங்’ முறையில் பணி ஒப்படைப்பு வழங்கப்பட்டுள்ளது. காவலர் பணியில் மொத்தம் 53 இடங்கள் காலியிடங்கள் இருந்துள் ளன. இதற்கான எழுத்துத் தேர்வில் 98 ஆயிரத்து 777 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றால், வெறும் 171 பேர்கள்தான். பின்னர் அதிலிருந்து 96 பேரை வடிகட்டி, 53 பேர்களை நியமனம் செய்துள்ளனர். 43 பேர்களைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்துள்ளனர். இந்நிலையில்தான், பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பின்புலம் குறித்த விசாரணையில், ஆவணங்களுக்கும், நியமனம் வழங்கப்பட்ட நபர்களுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருந்தது தெரியவந்துள் ளது. அதைத்தொடர்ந்து இன்னும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட் டம் உள்ளிட்ட முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, எப்சிஐ காவலர் நியமன விவகாரம் தொடர்பாக தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.