tamilnadu

img

வெளிநாடு செல்வதைத் தடுக்க ப.சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ்

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் திற்கு  முன் ஜாமீன் வழங்கதில்லி உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததால், அவர் வெளிநாடு செல்வதை தடுக்க  அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 
நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்த சிபிஐ2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும்என்று அவரது  வீட்டுச் சுவரில் சம்மன்  ஒட்டிவிட்டுச்சென்றது.இதனிடையே சிதம்பரம் தரப்பில்வழக்கறிஞர் கபில் சிபல், தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். எனினும் நீதிபதி ரமணா இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்க மறுத்து இவ்வழக்கைத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். நீதிபதி ரமணா பரிந்துரைத்த சிறிது நேரத்திலேயே மீண்டும் சிபிஐப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்றுள்ளது.

இதற்கிடையே கபில் சிபல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் முறையீடு செய்த நிலையில், அயோத்தி வழக்கு நடைபெற்று வருவதால், பிற்பகல் 1 மணிக்கு முறையிடலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து எங்களுக்குத் தெரிவிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.