கோஹிமா:
நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவில் ‘மிஸ் கோஹிமா’ (கோஹிமா நகரின் அழகான பெண்) போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் விக்கோனுவோ சச்சு என்ற போட்டியாளரும் கலந்து கொண்டார். அவரிடம், கேள்வி - பதில் சுற்றின்போது, “பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால், அந்தச் சந்திப்பின்போது நீங்கள் மோடியிடம் என்ன சொல்வீர்கள்?” என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுப் பப்பட்டது. இந்த கேள்விக்கு சச்சு திணறுவார் என்றும் அல்லது மோடியைப் புகழ்ந்துஏதாவது சொல்வார் என்றுதான் பலரும்எதிர்பார்த்தனர்.ஆனால், “இந்தியப் பிரதமருடன் பேசுவதற்கு என்னை அழைத்தால், மாடுகளுக்குப் பதிலாகப் பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்தும்படி கூறுவேன்” என்று கூறி விக்கோனுவோ சச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவரது பதில் கூட்டத்திலிருந்த பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பையும் உண்டாக்கத் தவறவில்லை. 18 வயதே ஆகும் விக்கோனுவோ சச்சு, மிக முக்கியமான பிரச்சனையை கொஞ்சமும் பயமோ, பதற்றமோ இன்றி, அனைவர் முன்பாகவும் துணிச்சலாக எடுத்துரைத்தது, அவருக்குப் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.மோடி ஆட்சி நடத்தும் லட்சணம் ஒரு இளம்பெண்ணுக்குக் கூட நன்றாகதெரிந்திருக்கிறது; இதற்காக, சச்சுமீது தேசத்துரோக வழக்கு போட்டாலும் போடுவார்கள் என்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனிடையே, அழகுப் பெண் ணுக்கான போட்டியில், சச்சுவுக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது.