tamilnadu

img

டிவிட்டரில் போலி வீடியோவை பகிர்ந்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, போலியான வீடியோ ஒன்றை பதிவிட்டு, சமூக வலைத்தளத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தம், ஓம் என்ற மந்திரத்தை ஒத்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது. உண்மையில், அது சித்தரிக்கப்பட்ட வீடியோ ஆகும். சூரியனில் இருந்து வெளியாகும் வெப்ப அலைகளின் சப்தத்தை நாசா வெளியிட்டுள்ளது உண்மையே. ஆனால், கிரண் பேடி பகிர்ந்தது சித்தரிக்கப்பட்ட ஒன்று.

சில ஆண்டுகளாகவே அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், இந்த போலி வீடியோவை பகிர்ந்த கிரண் பேடி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் குறைந்தபட்சம் ஒரு செய்தியை சரிபார்க்காமல் பகிர்ந்ததை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.