tamilnadu

img

காஷ்மீருக்குச் செல்ல ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு மட்டும் அனுமதியா? இறையாண்மையை காவு கொடுத்த பாஜக அரசு!

புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட் டத்தின் 370-வது பிரிவை, ரத்து செய்த பிறகு, அங்கு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஒருவரைக் கூட அனுமதிக்காத மத்தியபாஜக அரசு, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் அடங்கிய குழுவுக்கு மட்டும் அனுமதி அளித்தது. அந்த குழுவும் செவ்வாயன்று காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதனிடையே, மோடி அரசின் இந்தசெயல், பல்வேறு தரப்பிலும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

“இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சித்தலைவர்களை காஷ்மீர் செல்லஅனுமதிக்காத மத்திய அரசு, ஐரோப்பியஒன்றிய எம்.பி.க்களை மட்டும் அனுமதிப்பது ஏன்?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திங்களன்று கேள்விஎழுப்பியிருந்தார்.அவரைத் தொடர்ந்து, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, காங்கிரஸ் மூத்தத்தலைவர் ஜெய்ராம் ரமேஷ், செய்தித்தொடர்பாளர் ஜெய்விர் ஷெர்ஜில் உள் ளிட்டோரும் மோடி அரசுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பாஜகமூத்த தலைவரான சுப்பிரமணியசாமியும் மோடி அரசை விமர்சித்துள்ளார்.
“ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதற்காகவே 370-ஆவது பிரிவைநீக்கியதாக கூறும் மத்திய அரசு, ராகுல்காந்தியை காஷ்மீருக்குள் அனுமதிக்கமறுக்கிறது. அதற்குப் பதிலாக, தீவிரவலதுசாரி, பாசிச நகர்வு கொண்ட ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது; இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு, பாசிச எண்ணம்கொண்டிருந்தால் மட்டுமே காஷ்மீருக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் போலிருக்கிறது” என்று மெகபூபாமுப்தி சாடியுள்ளார்.
மேலும், “காஷ்மீர் வரும் ஐரோப்பியநாடாளுமன்றக் குழுவினர், ஏன், தற்போது காவலில் உள்ள மூன்று முன் னாள் முதல்வர்களான என்னையும், பரூக்அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவையும் சந்திக்கக் கூடாது? ” என்று கேள்விஎழுப்பிய மெகபூபா முப்தி, “காஷ்மீர் நிலை இயல்பாக உள்ளது என்று இந்தகுழுவினர் அறிக்கை அளித்தால், மத்தியஅரசு எங்களை விடுதலை செய்து, இணைய சேவைகளை வழங்க வேண்டும்; மாறாக, இயல்பு நிலை இல்லை என்று ஐரோப்பிக் குழு கூறினால், அது இந்திய அரசுக்குத்தான் அவமானம்” என்று பிடியை இறுக்கியுள்ளார்.

“மத்திய அரசின் நடவடிக்கைநாடாளுமன்றத்தின் இறையாண்மையை அவமதித்த செயல்” என்றும் “நாடாளுமன்ற உரிமைகளை அரசு மீறியதுஏன்?” என்பதற்கு விளக்கம் அளிக்கப் பட வேண்டும் என்றும் மாநிலங்களவை உள்துறை நிலைக்குழுவின் தலைவராக உள்ள ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.“இந்திய அரசியல் தலைவர்கள், காஷ்மீருக்கு செல்ல முடியாதபடி தடுத்துநிறுத்தப்படுகிறார்கள். அதேசமயத்தில், ‘தேசியத்தை காக்க வந்தவர் என்று மார்தட்டிக் கொள்பவர்’ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் எம்.பி.க்களை மட்டும் காஷ்மீர் செல்ல அனுமதிக்கிறார். இது இந்திய நாடாளுமன்றத்துக்கும், நமது ஜனநாயகத்துக்கும் பெரும் அவமதிப்பு” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்சாடியுள்ளார்.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் விடுத்துள்ள அறிக்கையில், “ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்கும்போது, இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்களை ஏன் அனுமதிக்கக்கூடாது?” என்று கேட்டுள்ளார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கு செல்ல உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டியுள்ளது. ஆனால்,ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களைபிரதமர் அலுவலகம் வரவேற்கிறது. இது,சம வாய்ப்பு மறுக்கப்படுகிற செயலாக உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.“370 ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்குள்ள நிலைமையை மதிப்பிட, ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு அனுமதிவழங்குவதற்கு முன்னதாக, நமதுநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறிப்பாக எதிர்க்கட்சிகளை அங்கு செல்ல அரசு அனுமதித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அளித்துள்ள பேட்டியில் “ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் குழுகாஷ்மீர் செல்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய் துள்ள தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. அதுநமது தேசியக் கொள்கைக்கு முரணானது” என்று கூறியுள்ளார்.