புதுதில்லி:
இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வளவு கறுப்புப் பணம் இருக்கிறது? என தங்களுக்குத் தெரியாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் புழங்கும் கறுப்புப் பணம் எவ்வளவு? என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சிப் பிஸ்வால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அளித்துள்ள பதிலில், “இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் கறுப்புப் பணத்தின் அளவு குறித்துஅரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை” என்றுதெரிவித்துள்ளார்.அதாவது, பாஜக ஆட்சிக்குவந்தால், பதுக்கி வைக்கப்பட் டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 15 லட்சம் விகிதம் வங்கிக்கணக்கில் போடுவோம் என்று கூறித்தான் பிரதமர் மோடி 2014-இல் ஆட்சியைப் பிடித்தார். அதன்பின் கறுப்புப் பணத்தை பிடிக்கப் போகிறேன் என்றுதான் 2016-இல் பணமதிப்பு நீக்க அழிவையும் நடத்தினார். ஆனால், தற்போது கறுப்புப் பணம் எவ்வளவு இருக்கும்? என்பதே தங்களுக்குத் தெரியாது என்று பாஜக அமைச்சர் அனுராக்தாக்குர் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பதிலளித்துள்ளார்.