tamilnadu

முதலாளித்துவ ஆளும் வர்க்கமே... கடைசி பத்தி தொடர்ச்சி...

மொத்த தொழிலாளர் வர்க்கம், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை ஆகியவற்றின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 26 நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்தின்போது, அதற்கு ஆதரவு தெரிவித்திட,200 விவசாய சங்கங்களை ஒன்றுபடுத்தியுள்ள அகிலஇந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காகும்.

தொழிலாளர் வர்க்கம் இந்த நிலைமையைச் சரியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்தினரின் ‘இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை’ என்கிற விரக்திக்குரலுக்கு, ‘இனி எப்போதும் உனக்கு இல்லை’ என்று உறுதியுடன் பதில் சொல்ல வேண்டும். இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்பு வேலைகள் ‘இப்போதே’ தொடங்கிட வேண்டும்.  இந்த நிலைமை தொழிலாளர் வர்க்கத்தின், விவசாயிகளின் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின்ஒன்றுபட்ட நடவடிக்கைகள், ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தல், ஒன்றுபட்டு தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றைக் கோருகிறது. தொழிலாளர் வர்க்கமும், தொழிலாளர் வர்க்கத் தலைமையும் இந்தப் போராட்டத்தை ஒத்திவைத்திடவோ, தாமதப்படுத்திடவோ அல்லது திசைதிருப்பிடவோ முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தமும், நவம்பர் 26-27 நாடு தழுவிய அளவில் விவசாயிகளால் நடத்தப்படும் கிளர்ச்சிப் போராட்டங்களும் தொடக்கம்மட்டுமே. வேலைநிறுத்தத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தின்தயாரிப்புகளும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இவை அனைத்தும் வரவிருக்கும் காலங்களில் நடத்தவிருக்கும் மாபெரும் போராட்டங்களுக்கு முன்னோடிகள் என்ற புரிதலுடன் இப்போது தீவிரமாக்கப்பட வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி