தரங்கம்பாடி, பிப்.19- நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள சீதை சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரும், கட்சியின் முன்னாள் வட்டக்குழு உறுப்பினரும், திருக்க டையூர் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான தோழர் அருணாச்சலபதி (67) செவ்வாயன்று திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய இவரின் 7 மகன்களில், 5 பேர் ஓவியர்கள். இவர்கள் வரைந்த நீட் தேர்வு, சாதி, மத பிரச்சனைகள் உள்ளிட்ட சமூக அக்கறைக் கொண்ட ஓவியங்கள் சமூக வலைத்தளங்க ளில் மிக பிரபலமானது குறிப்பிடத்தக்கது. திருக்கடையூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்சியை வளர்ப்பதில் மிகுந்த பங்காற்றிய அருணாச்சலபதியின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டநிலையில், தனது 7 மகன்களையும் கம்யூனிச சிந்தனையுடன் வளர்த்தவர். அன்னாரின் இறப்பு செய்தி அறிந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி, வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.கலைச்செல்வி, டி.ராசையன், ஏ.ரவிச்சந்திரன், வாலிபர் சங்க வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன், கிளைச் செயலாளர்கள் ஜீவானந்தம், பரமசிவம், செல்வம் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.