மும்பை:
நீதிபதி லோயா-வின் மர்மமரணம் குறித்து, தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசுஅறிவித்துள்ளது.பிரதமர் மோடி, கடந்த 15- ஆண்டுகளுக்கு குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது, பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறிகடந்த 2005-ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக்என்பவரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அவரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அடுத்தடுத்த சம்பவங்களில், சொராபுதீன் ஷேக் மனைவி கௌசர் பீ, உதவியாளர் துளசி பிரஜாபதி ஆகியோரையும் என்கவுண்ட்டர் செய்து கொன்றனர்.இந்த என்கவுண்ட்டர்களுக்கு பாஜக தேசியத் தலைவரும்- அன்றைய குஜராத் உள்துறை அமைச்சருமான அமித்ஷா-தான் சூத்திரதாரி என்று குற்றச்சாட்டு எழுந்தது.வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகளும் தனியாக விசாரித்து வந்தனர். ஆனால், மோடி பிரதமர் பதவிக்கு வந்தபின், சிபிஐ அதிகாரிகளின் விசாரணை தடுமாறத் துவங்கியது. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
இதனிடையே வழக்கை விசாரித்து வந்தநீதிபதி லோயா 2014-இல் மர்மமான முறையில்மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து வந்தநீதிபதி, அமித்ஷா உள்ளிட்ட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தார். நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பானவழக்கும் பின்னாளில் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது.இந்நிலையில்தான் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது; எனவே இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் என்னை சந்தித்து வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் வழக்கு மறு விசாரணை செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.