‘நெல் ஜெயராமனுக்கு சிலை; ரூ. 56 கோடியில் மாதிரி பள்ளி!’
திருவாரூருக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
திருவாரூர், ஜூலை 10 - திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று திருவாரூர் வந்தார். முதல் நாளில், ‘ரோடு ஷோ’ நடை பெற்ற நிலையில், இரண்டாவது நாளில், திரு வாரூர் மாவட்டத்தில் ரூ. 846 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளில் 1,234 முடிவுற்ற பணி களைத் தொடங்கி வைத்தார். அத்துடன், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது, திருவாருரில் 2.37 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். அதேபோல் திருவாரூரில் மட்டும் இதுவரை ரூ. 143 கோடி பயிர்க் காப்பீடு தொகை என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திரு வாரூரில் பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட்டில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். நன்னிலம், வண்டாம்பாளை யத்தில் ரூ. 56 கோடியில் மாதிரிப் பள்ளி அமைக்கப்படும். மன்னார்குடியில் ரூ. 18 கோடி மதிப்பில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் புனர மைக்கப்படும். பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்று 6 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
‘சமூகநீதி விடுதி’யில் முதலமைச்சர் ஆய்வு
முன்னதாக கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான ‘சமூக நீதி விடுதி’யில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாண வர்களுக்கான அரசு விடுதிகள், ‘சமூகநீதி விடுதி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டி ருப்பதையொட்டி, அதனை பார்வையிடும் நோக்கில், திருவாரூர் எஸ்.எஸ். நகர் செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதிகளில், நூலகம், சமையலறை, உண வருந்தும் அறை, பொருள் இருப்பு அறை ஆகிய வற்றை முதலமைச்சர் பார்வையிட்டார். விடுதியில் உள்ள மாணவ, மாணவியரின் தேவைகள், விடுதியில் உள்ள வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவை குறித் தும், நேரத்திற்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கேட்டறிந்தார். உணவு தயாரிக்கும் பணியாளர்களிடம், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. நாகை மாலி (சிபிஎம்), பூண்டி கலைவாணன் (திமுக) ஆகியோர் முதலமைச்சருடன் உடனிருந்தனர்.