tamilnadu

img

வாய்ப்பு வாசல்

விமான நிலையங்களில் 309 அரசுப்பணிகள்

Airport Authority India என்பது ஒன்றிய அரசுக்குக் கீழ் இயங்கி வரும் நிறுவனமாகும். இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்கு இளநிலை அதிகாரிக்கான 309 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் பொதுப்பிரிவினருக்கு 125, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு(முற்பட்ட வகுப்பினரில்) 30, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 72, எஸ்.சி. 55 மற்றும் பழங்குடியினருக்கு 27 என்றும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வயது - மே 24, 2025 ஆம் தேதியன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு(எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு) அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு. கல்வித்தகுதி - இளநிலைப் பட்டப்படிப்பில் இயற்பியல் அல்லது கணிதப் பாடத்தை முக்கியப்பாடமாக எடுத்து நிறைவு செய்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, மொழிப்புலமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் இருக்கும். கடைசித் தேதி - விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 24, 2025. விண்ணப்பத்தை நிரப்பவும், கூடுதல் விபரங்களைப் பெறவும் www.aai.aero என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

ஐடிஐ படித்தவர்களுக்கு 200 பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான Northern Coal Field நிறுவனத்தில் ஐடிஐ-யில் படித்தவர்களுக்கான 200 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்துக் காலிப்பணியிடங்களும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான தாகும். ஐடிஐ-யில் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்துவிட்டு அந்தந்தப் பணியிடங்களுக்கான ஒரு ஆண்டு தொழில் பழகுநர்(Apprentice) பயிற்சியையும் நிறைவு செய்திருக்க வேண்டும்.  வயது - விண்ணப்பம் செய்பவர்களின் உச்சபட்ச வயது மே 10, 2025 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பொது அறிவு,  பொது ஆங்கிலம், காரணம் அறிதல் ஆகியவற்றோடு அந்தப் பணியிடங்களுக்கான ஐடிஐ பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் இருக்கும். கடைசித் தேதி - விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மே 10, 2025க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இணைப்புக்கும், முழு விபரங்களுக்கும் www.nclcil.in என்ற இணையதளத்திற்கு செல்லலாம்.

இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயுத் திட்டத்தின் கீழ் இசைக்கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் உள்ள இசைக்குழுவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இசைப்பயிற்சி பெற்றவர்கள் கூடுதல் விபரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

விண்ணப்பித்து விட்டீர்களா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகிவிட்டது. மே 24, 2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைனில் நிரப்ப வேண்டும். முழு விபரங்களுக்கும், விண்ணப்பம் நிரப்புவதற்கான இணைப்புக்கும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.