புதுக்கோட்டை, செப்.9 - வயநாடு நிவாரண நிதியாக ரூ. 68,200-ஐ பரம்பூர் கிராம மக்கள் வழங்கியுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதி யில் ஏராளமான உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதிலி ருந்து மீள்வதற்கு அம்மாநில அரசும், மக்களும் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். வய நாடு நிவாரண நிதிக்காக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் கிராமத் தைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இணைந்து 68 ஆயிரத்து 200 ரூபாய் திரட்டி யுள்ளனர். இதனை வங்கி வரைவோலையாக எடுத்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலு வலர் ராஜராஜனிடம் ஒப்படைத்தனர். இந்த நிதி மாவட்ட ஆட்சியர் மூலமாக கேரள மாநில அர சுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், கே.சண்முகம், பரம்பூர் வர்த்தகர் சங்க துணைத் தலைவர் முகமது பாரூக், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஆர்.சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.ஆர்.என்.அய்யலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.