tamilnadu

img

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் ஒன்றிய அரசின் வாதம் தவறு: ரகுபதி

சென்னை,ஜூலை 20- ஆன்லைன் சூதாட்ட தடை  சட்டம் கொண்டு வர தமிழ்நாடு  அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு விரோ தமாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முடியாது. ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்க ளில் அதிகரித்துள்ளதாக கூறுவ தற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக் கும் முன்பு ஆன்லைன் விளை யாட்டு நிறுவனங்களின் கருத்துக் களை கோரவில்லை. முறையான விசாரணை நடத்தாதது பாரபட்ச மானது என்று ஒன்றிய  அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர் பாக சட்டத்துறை அமைச்சர் ரகு பதி சென்னையில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என  ஒன்றிய அரசு வாதிட்டது தவறா னது. ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள் தான் கொண்டு வந்ததே தவிர சட்டம்  எதுவும் இயற்றவில்லை. மாநில அரசுகளின் உரிமை களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உருவாக்கம். நேரடியாக விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.