சமூக சீர்திருத்தத்துறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்
வரதட்சணை ஒழிப்பு மாநாட்டில் நிறைவுரை யாற்றிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதன் சுருக்கம் வரு மாறு: வரதட்சணையின் வேர்களை எதிர்த்துப் போராட்டம் வரதட்சணையின் வேர்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடு கிறது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக ஏற்றத்தாழ்வு காரணமாக வரதட்சணை நீடிக்கிறது. ஆண் எதிர்ப்பு, பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற முறையில் பிரச்சனையை அணுகுவது பொருத்த மற்றது. பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு வர்க்க சமூகம், பெண்ணடி மைத்தனம் இரண்டும் ஒத்திசைந்து வந்துள்ளது. பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாக வரதட்ச ணை உள்ளது. வரதட்சணை, பெண்ண டிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம், வர்க்க பேதமற்ற சோசலிச சமூக அமைப்புக்கான போராட்டத்தோடு இணைந்தது. தமிழ் பண்பாடு, கலாச்சாரம் குறித்து பேசுகிறவர்கள், தமிழர் மரபில் பரிசம்தான் இருந்தது. வரதட்சணை இருந்ததில்லை என்பதை ஏன் கூற மறுக்கிறார்கள்? வரதட்சணை வாங்குகிற இடத்தில் உள்ளவர்களுக்கு அதுகுறித்து பேச தைரியம் இல்லை. வரதட்சணையின் புதிய வடிவங்கள் ஆணாதிக்கம், சாதி, அகமண முறை ஆகியவை வரதட்சணை நீடிப்ப தற்கு, அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. பாத்திரம், நகை என்பது மாறி, வீடு, சொகுசுகார், தொழில் தொடங்க முதலீடு என வரதட்சணை உருமாறிக் கொண்டு இருக்கிறது. திருமணத்தின்போது வாங்குவது மட்டும் வரதட்சணை அல்ல, வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் அனைத்துமே வரதட்சணைதான். சட்ட அமலாக்கத்தில் குறைபாடுகள் வரதட்சணையை தடுக்க உள்ள சட்டங்களை முழுமையாக அமல்படுத்தினாலே போதுமானது. மாறாக, காவல்துறை வழக்கை முறை யாக பதியாமல் உள்ளது. அதற்கு காரணம் அவர்களது சிந்தனையில் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாறாக, சமூகம் வைத்துள்ள சட்டங் கள்தான் உள்ளது. எனவேதான், பெண்கள், சாதி ரீதியான வழக்குகளில் உரிய கவனம் செலுத்த மறுக்கின்றனர். காவல்துறைக்கு நிகர்நிலை பயிற்சி வழங்க வேண்டும். வரதட்சணை பிரச்சனையில் முறையாக வழக்கு பதியாத, நடத்தாத காவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும். கட்சித் திட்டத்தில் குடும்ப ஜனநாயகம் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் குடும்ப கட்டமைப்பை ஜனநாயகப் படுத்த வேண்டும், சாதி மறுப்பு திருமணம், குடும்பத்தினருடன் பண்பாட்டு உரையாடல் நடத்த வேண்டும் என்கிறது. கட்சி உறுப் பினர்கள் குடும்ப வன்முறையில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சீமான், விஜய் உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியினரிடம் குடும்ப வன்முறை கூடாது, வரதட்சணை வாங்கக் கூடாது, சாதி மறுப்பு திரு மணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்களா? பெரியார் சொன்ன தை நடைமுறைப்படுத்தாமல் அவர் பெயரை மட்டும் இவர்கள் முழங்குவதால் என்ன பயன்? அமைச்சர்கள், தலைவர்கள் தங்களது குடும்ப திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும். சமூக சீர்திருத்தத்துறை மீண்டும் தேவை கலைஞர் முதலமைச்சராக இருந்த போது சமூக சீர்திருத்தத்துறை இருந்தது. அந்தத்துறை பெண்ணடி மைத்தனம், குடும்ப வன்முறைக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. அதன் பிறகு அந்தத்துறை மூடப்பட்டது. எனவே, தற்போது மீண்டும் சமூக சீர்திருத்தத்துறையை கொண்டு வர வேண்டும், ஊடகங்கள் வாயிலாக சமூக செய்திகள் அடங்கிய விளம்ப ரங்கள், குறும்படங்கள் வெளியிடுவது போன்றவற்றை செய்ய வேண்டும். சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் தேவை வரதட்சணையை கட்டுப்படுத்து வது, பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பது உள்ளிட்ட சமூகப்பிரச்ச னைகள் குறித்து சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை நடத்த வேண்டும். பெண்கள் அமைப்புகளோடு முதலமைச்சர் ஆலோசனை பெற்று செயல் திட்டம் வகுக்க வேண்டும். திராவிட சித்தாந்தத்திற்கு இதற்கான அரசியல் உறுதி உள்ளது. திராவிட சித்தாந்தத்தின் பெயரில் செயல்படுகிற திமுக அரசு பெண்ணடிமைத்தனம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை களைய முன்வர வேண்டும். வர்க்கப் போராட்டத்தின் ஒருபகுதி வர்க்கப் போராட்டத்தின் ஒருபக்கம் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என்றால், மறுபக்கம் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உள்ளது. முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தின் ஒருபகுதியாக பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்த போராட்டத்தையும் முன்னெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.