மேப்பாடி, செப்.10 - வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடுகளை இழந்து தற்காலிக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஓணத் துக்கு முன்னதாக வாடகை வழங்கப் படும் என வருவாய்த் துறை அமைச் சர் கே.ராஜன் தெரிவித்தார். சூண்டேல் பாடசாலையில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: தற்கா லிக வீடுகளில் தங்கியுள்ள 535 குடும் பங்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் வாடகை செலுத்த, வைத்திரி தாலுகா அலுவலகம் இணைக்கப்பட்டுள்ளது. மேப்பாடி கிராம பஞ்சாயத்து செயலா ளர் 174 பேர் தங்கள் உறவினர் வீடு களுக்கு மாறிய தகவல் அடங்கிய புதிய பட்டியலை வழங்கியுள்ளார். இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர், தாசில்தார், தாலுகா அலுவ லக துணை தாசில்தார் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு சரிபார்க்கும் என்று அமைச்சர் கூறினார். 24 பேர் சொந்த வீடுகளுக்குச் சென்று விட்டனர். இடம் மாறியவர்களின் முழு மையான பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஓணத்துக்கு முன் நிலுவைத் தொகை இருந்தால், அவர்களுக்கு வழங்கப்ப டும். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டத்தில் சிறப்பு அறி வுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். 931 குடும்பங்களுக்கு அவசர உதவி யாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிதி வழங்காத நிகழ்வுகள் இருந்தால், ஓணத்துக்குள் அவர்களுக்கு கிடைக்கும். ஒரு மாதம் ரூ.300 வழங்கப்படும் என்ற அரசாங்கத் தின் கொள்கையின்படி 829 குடும்பங் களுக்கு தலா 300 ரூபாயும் ஒரு குடும்பத்தில் இருவருக்கு 300 ரூபாய் வழங்கும் திட்டத்தில் 706 குடும்பங் களுக்கு இத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. குடும்பஸ்ரீ மூலம் பேரிடர் பகுதியில் உள்ள 1009 வீடுகளில் மைக்ரோ சர்வே நடத்தப்பட்டது. விவசாயம், கல்வி, சிறு குறு தொழில்கள் மற்றும் வாகனம் உட்பட 1749 கடன்கள் உள்ளன. வைத்திரி தாலுகாவில் ஜப்தி நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமை யில் வங்கி அதிகாரிகளிடம் பேசியதாக வும் அமைச்சர் குறிப்பிட்டார்.