tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வழக்கு பதிவு குறித்து முதல்வர் கொடுத்த ஆதாரங்களே உண்மை

சென்னை, ஜன.11- பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள் ளிக்கிழமை (ஜன.10) நடந்த விவாதத்தின் போது, தமிழக முதல்வ ருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். அதன்படி, பொள்ளாச்சி வழக்கில் அதிமுக அரசு வழக்குப் பதிவு செய்தது எப்பொழுது? குற்றவாளி கள் எப்போது கைது செய்யப்பட்ட னர் உள்ளிட்ட ஆதாரத்தை நான் பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்கி றேன். நீங்கள் ஆதாரத்தை ஒப்படைக்க தயாரா? என்றார். இதையடுத்து, சனிக்கிழமை (ஜன.11) முதல்வர் சார்பில் பேர வைத் தலைவரிடம் ஆதாரங்கள் ஒப்ப டைக்கப்பட்டன. அதேபோல் அதிமுக சார்பில் பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக எடுத்த நடவடிக்கைகள் தொ டர்பான ஆதாரங்கள் சமர்ப்பிக் கப்பட்டன. இந்த நிலையில், இதுகுறித்து அவை முன்னவர் துரைமுருகன் பேரவைத் தலைவரின் தீர்ப்பு என்ன என்றார். இதையடுத்து, தனது தீர்ப்பை வாசித்த பேரவைத் தலைவர் மு. அப்பாவு, ‘பொள்ளாச்சி விவகாரத்தில் இரண்டு தரப்பு அளித்த ஆவணங்க ளை சரி பார்த்ததில் 12 நாட்களுக்குப் பிறகுதான் வழக்குகள் பதிவு செய்யப் பட்டது என்று முதல்வர் கொடுத்த ஆதாரங்கள் உண்மையாகும். எதிர்க் கட்சித் தரப்பு கொடுத்த ஆதாரங்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என தீர்ப்பு வழங்கினார். பேரவைத் தலைவரின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கோச மிட்டனர்.