தமிழ்நாடு நீர்வளம் மற்றும் இயற்கை வளங்கள் துறை முக்கிய அறிவிப்புகள்
பாசன அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழகத்தில் பழுதடைந்த பாசன அமைப்புகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. 35 மாவட்டங் களில் 149 பாசன அமைப்புகள் ரூ.722.55 கோடி செலவில் புனரமைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதில் 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் ரூ.374.95 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், திண்டுக் கல், கள்ளக்குறிச்சி, மதுரை உட்பட 8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடி செலவில் புதிய அணைக்கட்டுகள் அமைக்கப் படவுள்ளன. விவசாய நிலங்களை எளிதாக அடைய 8 மாவட்டங்களில் 17 இடங்களில் ரூ.130.80 கோடி செலவில் பாலங்கள் மற்றும் தரைப்பா லங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சால் புயலால் சேதமடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு ரூ.130 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
வெள்ளத் தடுப்பு முன்னெடுப்புகள்
சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வெள்ளத் தடுப்புக் காக 12 ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை திட்டங்கள் ரூ.338 கோடி செலவில் மேற் கொள்ளப்படும். மேலும் 7 மாவட்டங்களில் 11 இடங்களில் ரூ.131.28 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தணிப்புப் பணிகள் நடைபெறும்.
நீர்வள பராமரிப்பு நடவடிக்கைகள்
அணைகள் மற்றும் கதவணைகளின் கதவுகளை பழுது பார்த்தல், பராமரித்தல் பணி கள் 11 மாவட்டங்களில் 16 இடங்களில் ரூ.149.09 கோடி செலவில் மேற்கொள்ளப் படவுள்ளன. நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளில் உள்ள கதவுகளை பழுது பார்க்கும் பணிகள் 11 மாவட்டங்களில் 48 இடங்களில் ரூ.21.06 கோடியில் நடைபெறும். சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மண்டலங்களில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களை ரூ.120 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.
மேகதாது அணை தொடர்பான அரசின் நிலைப்பாடு
மேகதாது அணை தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். “தமிழ்நாட்டின் அனுமதி யின்றி காவிரியில் எந்த அணையும் கட்ட முடி யாது” என்று உறுதிபட தெரிவித்த அமைச்சர், ஒன்றிய வனத்துறையும் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறினார். யாராக இருந்தாலும் மேகதாதுவில் அணை கட்ட முடி யாது எனவும் அவர் அழுத்தமாக கூறினார்.
கனிம வளங்கள் மேலாண்மை
தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25 ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் வரை யிலான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு கனிம நிறுவனம் 2025- 26 ஆண்டில் ரூ.155 கோடி விற்பனை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.