உரங்கள் இல்லாத விவசாயத்திற்கு உதவும் கூட்டுயிரி வாழ்க்கை'
யுகே ஆய்வாளர்களின் உயிரினங்களின் கூட்டுறவு வாழ்க்கை பற்றிய கண்டுபிடிப்பு உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து நீடித்த நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேளாண்மையைப் பரவலாக்கும் என்று நம்பப்படுகிறது. இது சூழலுக்கு நட்புடைய புதிய விவசாய முறைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். தாவர வேர்களைக் கவரும் மண்ணில் வாழும் நுண்ணுயிரி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கூட்டுயிரி வாழ்க்கை யுகே நார்விஜ் (Norwich) நார்ஃபெக் (Norfolk) ஜான் இன்னெஸ் மையத்தை (John Innes Centre) சேர்ந்த விஞ்ஞானி களின் இந்த ஆய்வுகள் நைட்ரேட், பாஸ்பேட் உரங்களைக் குறைவாக எடுத்துக்கொள்ளும் பயிர்களை உருவாக்க உதவும் புதிய வாசலைத் திறந்துள்ளது. “சூழலுக்கு நட்புடைய விவசாயத்தை வளர்த்தெடுக்க, செயற்கை உரங்கள் குறைவாகத் தேவைப்படும் பயிர்களை வளர்க்க இது உதவும்” என்று ஆய்வுக் குழு விஞ்ஞானி டாக்டர் மைரியம் சார்பண்டி யர் (Dr Myriam Charpentier )(கூறு கிறார். சமீப ஆண்டுகளில் மிதமிஞ்சிய உரப் பயன்பாடு மண் வள இழப்பை ஏற்படுத்தி பெரிய சூழல் பிரச்சனையாக மாறிவரு கிறது. வயல்களில் இருந்து வழிந்தோடும் கழிவுகள் கலந்த நீர் நதிகளை மாசுபடுத்து கிறது. நீரில் ஆல்காக்கள் பல்கிப் பெருகி பரவுகின்றன. இதனால் மீன் மற்றும் இதர நீர் வாழ் உயிரினங்கள் கொல்லப்படு கின்றன. இந்த ஆய்வு மண்ணில் உள்ள சத்துகளை மண்ணில் வாழும் நுண்ணுயிரி களின் உதவியுடன் அதிகத் திறனுடன் எடுத்துக்கொள்ளும் பயிர்களை உரு வாக்க உதவும் புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளது. இந்தச் செயல்முறையின் அடிப்படை எண்டோசிம்பயோசிஸ் (Endosymbiosis) அல்லது கூட்டுயிரி வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவும் முறையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரி னத்திற்குள் வாழ்வதைக் குறிக்கிறது. இந்தச் செயல்பாடு மூலம் சில தாவ ரங்கள் நுண்ணுயிரிகளின் உதவியுடன் வளமற்ற மண்ணில் இருந்து சத்துகளை தேடிப் பெறுகின்றன. ஆனால் வேளாண்மை நடைமுறையில் வேதி உரங்கள் விளைச்சலை அதிகப் படுத்தப் பயன்படுகின்றன. இது பயிர்களுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையில் உள்ள இயற்கையான உறவுகளுக்கு இடையூறாக உள்ளது. மெடிக்ககோ டிரங்காட்டுலா (Medicago truncatula) என்ற இரு வித்திலை தாவ ரத்தில் நடைபெறும் திடீர் மரபணு மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சூழலுக்கு நட்புடைய விவசாயம் இது பாக்டீரியாக்கள், பூஞ்சைகளுடன் உறவை ஏற்படுத்தி தாவர வேர்களுக்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை விநி யோகிக்கிறது. இந்த செயல்முறை தாவ ரங்கள் சத்துகளை கிரகித்துக் கொள்வதை மேம்படுத்துகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் நேச்சர் (Nature) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. வயல் சூழலில் கோதுமையிலும் இதே மரபணு திடீர் மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் நுண்ணுயிரிகள் உதவி யுடன் சத்துகளை எடுத்துக்கொள்ளும் புதிய கோதுமை ரகங்களை உருவாக்க லாம். இதனால் மிகப்பெரிய அளவில் தனிம வேதி உரங்களின் பயன்பாடு பெருமளவில் குறைய வழி ஏற்படும். இது மரபணு மாற்றம் செய்யப்படாத கோதுமை ரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பயிர் வளர்ப்போர் பாரம்பரிய பயிர் வளர்ப்பு முறைகளை பயன்படுத்தலாம். முக்கிய பயிர் வளர்ப்பில் கனிம வேதி உரங்களுக்கு ஒரு இயற்கை மாற்றாக கூட்டு யிரி வாழ்க்கை வாழும் உயிரினங்களைப் பயன்படுத்த இந்த ஆய்வு பெரிதும் உதவும். நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வேளாண்மைக்கு இந்த கண்டு பிடிப்பு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.