tamilnadu

img

சங்-பரிவாருக்கு சாதகமாக யுஜிசி விதிகளை வகுப்பதா?

மாணவர் இயக்கங்கள் போராட்டம்

சென்னை, ஜன. 10 - சங்-பரிவாரப் பேர்வழிகளை பல் கலைக்கழகங்களில் ஊடுருவச் செய்யும் முயற்சியாக, துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்களை பறித்து ஆளுநருக்கு வழங்கும் வகையில் பல்கலைக்கழக மானி யக்குழு வகுத்துள்ள புதிய வரைவு விதிமுறைகளைக் கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று (ஜன.10)  கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் எளிய மக்களின் கல்வி யைக் கபளீகரம் செய்வதற்கும், சமூக நீதியைப் பறிப்பதற்கும் ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, பல் கலைக்கழகங்களின் தனித்தன்மை யை, தன்னாட்சியை ஒழிக்கும் வகை யில், துணைவேந்தர் தேடுதல் குழு வையும் ஆளுநரே அமைப்பார் என்று யுஜிசி புதிய அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் மீது அத னைத் திணிக்க இதுபோன்ற அதிகார  வரம்பு மீறல்களைத் தொடர்ந்து செய்கிறது. ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மீதும், மாநில அரசு  உரிமைகளை பறிக்கும் வகை யிலும் புதிய அறிவிப்பை தற்போது செய்துள்ளது. எனவே, இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் கல்வி வளாகங் கள் தோறும் தொடர் இயக்கத்தை நடத்தி வருகிறது.  இதன் தொடர்ச்சியாக ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு’ சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், கல்வி நிலைய வளாகம் தோறும் போராட்டங் கள், மாவட்ட அளவில் கருத்தரங்கு கள், கையெழுத்து இயக்கங்கள் நடத்துவது என போராட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, இந்திய மாண வர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் கோ. அரவிந்தசாமி, மத்தியக் குழு உறுப்பினர் சி. மிருதுளா மற்றும்  இப்ராஹிம், தினேஷ் (அனைத் திந்திய மாணவர் பெருமன்றம்), செந்தூர் பாண்டியன் (திராவிட மாண வர் கழகம்), செஞ்சுடர் (முற்போக்கு மாணவர் கழகம்) உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.