2 நாட்களுக்கு மழை வாய்ப்பு
சென்னை, மார்ச் 24- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழ டுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய் மற்றும் புதன்கிழமை களில், (மார்ச் 25, 26) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை
இராமேஸ்வரம், மார்ச் 24- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றை, இலங்கை கடற் படையினர் சிறைபிடித்த தாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத் திற்கு மேலாக அந்தப் படகில் இருந்த 7 மீன வர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற் படையினர், அந்த மீன வர்களை எச்சரித்து எந்த வழக்கும் பதிவு செய்யா மல் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இத னால் படகுடன் மீனவர் கள் நிம்மதியுடன் கரை திரும்பியுள்ளனர்.
அந்தமான் கடல் பகுதியில் 4.9 ரிக்டருக்கு நிலநடுக்கம்
புதுதில்லி, மார்ச் 24- அந்தமான் கடல் பகுதி யில் திங்களன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள் ளது. காலை 9.59 மணியள வில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக் டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித் துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 10.27 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.63 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட் டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடி யாக வெளியிடப்படவில்லை.