தமிழகத்திலும்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்
சென்னை, அக். 24 - தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision- SIR) தொடங்கும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலேயே, தேர்தல் ஆணை யம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. “தேர்தல் நியாயமாகவும், நேர்மையாக வும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், சென்னை தியாகராயர் நகர் தொகுதி யில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும்” என்று சத்தியநாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிலளித்த தேர்தல் ஆணை யம், “தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பீகாரைப் போன்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனத்தில் கொள்ளப்படும்” என கூறியுள்ளது. இதனிடையே மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கைப்பாவை ஆக்கிக் கொண்டு, இஷ்டத்திற்கு ஆட்டுவிப்பதாகவும், தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், பாஜக வுக்கு வாக்களிக்காத சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினரின் வாக்கு களைக் குறிவைத்து நீக்குவதாகவும், அதற்கான ஆயுதமாகவே சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான ஆதாரங்களும் அண்மை யில் பகிரங்கமாக வெளியாகின. இதனால், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநி லங்களிலும் எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான், தமிழ கத்தில் எஸ்ஐஆர் பணிகள் அடுத்தவாரம் துவங்கும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.