தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு
பிரதிநிதிகள் மாநாட்டை டாக்டர் அசோக் தாவ்லே துவக்கி வைத்தார்
சேலம், ஆக. 9 – தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாடு சேலத் தில் ஆகஸ்ட் 9 அன்று துவங்கியது. மாநாட்டின் துவக்கமாக, மாபெரும் பேரணி நடைபெற்றது. கூட்டமைப்பின் தென்மண்டலத் தலைவர் பி.பி. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்தப் பேரணியை, மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார்.
அசோக் தாவ்லே - ஸ்ரீகாந்த் மிஸ்ரா
பேரணி முகப்பில் 18 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் என முப்பத்தி ஆறா வது மாநாட்டை குறிக்கும் வகையில் 36 இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கக் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அமானுல்லா கான், கே. வேணுகோபால் ரவீந்திரநாத், வி. ரமேஷ், பி.எஸ். ரவி, எம். கிரிஜா உள்ளிட்ட தலைவர்கள், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 13 கோட்டங்களில் இருந்து பெரும்திர ளான ஊழியர்கள் பேரணியில் பங்கேற் றனர். பேரணியின் நிறைவாக, சேலம் மூன்று ரோடு வரலட்சுமி மகாலில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே துவக்கி வைத்துப் பேசினார். சங்கத் தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா சிறப்புரையாற்றினார்.
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்புக்கு எதிர்ப்பு
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவிகிதத்தி லிருந்து 100 சதவிகிதமாக உயர்த்து வதை எதிர்த்தும், பொதுத்துறை இன்சூ ரன்ஸ் துறையை பலவீனப்படுத்தும் வகையிலான இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணை யத்தின் முன்மொழிவுகளை கண்டித் தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் துறையின் நான்கு கம்பெனிகளை ஒருங்கிணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்கிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது; எல்ஐசி நிறு வனத்தில் புதிய பணி நியமனங்களை உருவாக்க வேண்டும், தொழிலாளர் - தொழிற்சங்க உரிமைக்கு எதிரான தொழிலாளர் விரோத 4 புதிய சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தலைவர்கள் வாழ்த்துரை
சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார், அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் எம். கிரிஜா, பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச்செய லாளர் ஜி. ஆனந்த், இந்திய வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ். சுனில் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆகஸ்ட் 10, 11 தேதிகளிலும் பிரதி நிதிகள் மாநாடு நடைபெறுகிறது. தமிழ் நாடு, கேரளம் மாநிலங்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.