தனியாக வந்தவர்களை 5 கட்டங்களாக 25-க்கும் மேற் பட்டோரை போலீசார் கைது செய்து திருநகர் பகுதியில் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பகல் 12.30 மணியளவில் கோவிலுக்குள் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் திடீரென்று தேனியை சேர்ந்த பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்களையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அனுமதி வழங்கிய நிலையில், வாகனங்கள் மூலம் அங்கு சென்ற சங்-பரி வாரக் கூட்டத்தினர், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.