காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வரும் சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக பாதுகாப்பு நிதியாக ரூ.1லட்சம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ. செல்வம் சாம்சங் தொழிலாளர் போராட்டத்தினை வாழ்த்திப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சா. டானியல் ஜெயசிங், மாநில பொருளாளர் மு. பாஸ்கரன் துணைப் பொதுச் செயலாளர் தெ. வாசுகி, வடசென்னை மாவட்ட செயலாளர் ம. அந்தோணிசாமி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் மருதன், மாவட்டத் துணைத் தலைவர் திலகவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.