பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலம், குஜராத் மாநிலத்தைப் போன்று போ தைப்பொருள் கூடார மாக மாறி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போ தைப் பொருள் பறி முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நவிமும்பையில் போ தைப் பொருள் கடத்தல் கும்பலிடம் 11.54 கிலோ எடையுள்ள விலை உயர்ந்த கோகைன் போதைப் பொருள், 5.5 கிலோ எடையுள்ள கஞ்சா ஜெல்லிகள், கஞ்சா விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய் யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.200 கோடி என செய்திகள் வெளி யாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்த கோகைன் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதான 4 பேருடன் தொடர்பில் இருந்த வர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவின் (என்சிபி) மும்பை மண்டல அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.