நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் மீட்பு
தஞ்சாவூர், அக்.24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான ஐந்து இடங்கள் ஆக்கிர மிப்பிலிருந்து மீட்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் அறிவுறுத்த லின் பேரில், பேராவூரணி கடைவீதியில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த களம் மற்றும் வீடு, நீலகண்டபுரம் பகுதியில் இரண்டு தென்னந்தோப்பு மற்றும் மண்பானை கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கூரை வீடு உள்பட 5 இடங்கள் மீட்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டு திருக்கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலை யத்துறை தஞ்சை உதவி ஆணையர் தி.ஞா.ஹம்சன், திருக்கோவில் ஆலய நிலங்கள் வட்டாட்சியர் பார்த்த சாரதி, பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் சார்பில் செழியன், வருவாய்த்துறை அலு வலர்கள், காவல்துறை மற்றும் திருக்கோவில் பணியா ளர்கள் உடனிருந்தனர்.
மழையில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி
அரியலூர், அக்.24 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (46). விவசாயக் கூலியான இவர், தனது வீட்டின் கூரையை மாற்றி அமைக்கும் பணியில், துளாரங்குறிச்சி காலனி தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன் (60) என்பவருடன் சேர்ந்து மழையில் நனைந்து ஊறிய நிலை யில் இருந்த தனது வீட்டின் கூரையை பிரித்து அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது மழையில் நனைந்து ஊறிய நிலையில் காணப்பட்ட மண் சுவர், திடீரென இடிந்து விழுந்ததில் அன்பழகனு, ராமச்சந்திரனும் மண் சுவர் இடிபாடுகளுக் குள் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நூற நாள் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் ஓடி வந்து மண் சுவற்றை அகற்றி அவர்கள் இருவரையும் மீட்டனர். இருப்பி னும் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அன்பழ கன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முத லுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இறந்து போன ராமச் சந்திரனுக்கு 6 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். அன்ப ழகனுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர்.