கேலோ இந்தியா விளையாட்டு 2025 ராஜஸ்தானுக்கு முதல் தங்கம்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி கள் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகத் தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மே 4ஆம் தேதி தொடங்கியது. பீகார் மற்றும் தில்லியில் நடைபெற்று வரும் இந்த தொடர் மே 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 5,000க்கும் மேற்பட் டோர் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இத்தகைய சூழலில், 2025ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை ராஜஸ்தான் கைப்பற்றியது. 10 மீ ஏர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிராச்சி - மயங்க் சவுத்ரி ஆகியோர் அடங்கிய ராஜஸ்தான் கலப்பு அணி, உத்தரப்பிரதேசத்தின் தேவ் பிரதாப் மற்றும் உருவா சவுதிரி ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
6,6,6,6,6,6 ரியான் பராக் செய்தது சாதனையா?
8ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளை யாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து வெறும் 1 ரன் வித்தி யாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்ச மாக அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் 95 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், 13ஆவது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2ஆவது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். மேலும் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் ரியான் பராக் சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி ரியான் பார்க் புதிய சாதனை படைத்துள்ளார். சாதனையா? ஐபிஎல் தொடரில் இதுவரை 6 பந்து களுக்கு 6 சிக்ஸர் யாரும் அடிக்க வில்லை. ரியான் பராக் 6 பந்து களுக்கு 6 சிக்ஸர் அடித்தாலும் அவர் ஒரே ஓவரில் அடிக்கவில்லை. 2 ஓவர் களில் (தான் சந்தித்த 6 பந்துகளில்) அடித்துள்ளார். அதனால் இது வித்தியாசமான சாதனை ஆகும். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ ராஜ் சிங் 2007ஆம் ஆண்டு டி-20 உல கக்கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்து வரலாறு படைத்தார். அதன்பிறகு எந்த இந்தியரும் இது வரை 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.