புன்னப்புரா – வயலார் தியாகம் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு எப்போதும் உத்வேகம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம்
புன்னப்புரா - வயலாரில் நடந்த புகழ் பெற்ற போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு எப்போதும் ஒரு உத்வேகமாக இருந்து வருகிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். திவான் ஆட்சி, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியின் கீழ் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட புகழ்பெற்ற புன்னப்புரா - வய லார் போராட்டம் தொடங்கி 79 ஆண்டுகள் நிறை வடைகிறது. சேர்த்தலா மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் விவசாயிகள் நடத்திய துணிச்சலான போராட்டத்திற்கு தோழர் வி.எஸ் (அச்சுதானந்தன்) மற்றும் பிறர் அற்புதமான தலைமையை வழங்கினர். ஆனால் வி.எஸ் இல்லாத முதல் புன்னப்புரா - வயலார் வாரம் இது. புன்னப்புரா - வயலாரில் நடந்த அடக்கு முறை, தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்க மைக்கப்பட்ட இயக்கத்தையும் அதன் முன்னணிப் போராளியான கம்யூனிஸ்ட் கட்சி யையும் அழிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு அப்பட்டமான நடவடிக்கையாகும். 1946 அக்டோபர் 24 முதல் 27 வரை, திவான் இராணு வத்தின் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு எதி ராக தோழர்கள் போராடினர். புன்னப்புரா - வய லாரில் பல தோழர்கள் தியாகிகளாக இறந்தனர். திருவிதாங்கூரில் முடியாட்சிக்கும், அமெரிக்க பாணியிலான திவான் சி.பி. ராம சாமி ஐயரின் ஆட்சிக்கும் எதிரான தன்னலமற்ற போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு எப்போதும் உத்வேகம் அளித்துள்ளது. திவான் இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகளை எதிர்த்து ஈட்டிகள் ஏந்திப் போராடியதே புன்னப்புரா-வயலார் போராட்டக் கதைகள், நிலப்பிரபுத்துவ சமூக நிலைமைகளிலிருந்து நவீன கேரளாவிற்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு விதைகள் விதைக்கப்பட்டுள்ளன” என அவர் கூறினார். எழுச்சிமிகு நினைவுதின நிகழ்வுகள் புன்னப்புரா-வயலார் வார விழாவின் நிறை வாக, பி. கிருஷ்ண பிள்ளை உள்ளிட்ட வீரமர ணம் அடைந்த தியாகிகள் மற்றும் கம்யூ னிஸ்ட் தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வலிய சுடுகாடு தியாகிகள் மண்டபத்திலிருந்து, வயலார் தியாகிகள் எரியூட்டப்பட்ட வயலார் தியாகிகள் மண்டபம் வரை ஜோதி ஊர்வலம் திங்களன்று காலை தொடங்கியது. மூத்த சிபிஎம் தலைவர் ஜி. சுதாகரன் விளையாட்டு வீரர்களிடம் ஜோதியை ஒப்படைத்தார். நூற்றுக்கணக்கான வாகனங்களுடன், ஜோதி வயலாரை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. பல இடங்களில் வரவேற்புப் பெற்ற பிறகு, காலை 11 மணிக்கு வயலார் தியாகிகள் மண்டபத்தை அடைந்ததும், வார விழாக் குழுவின் தலைவர் எம்.சி.சித்தார்த் ஜோதியைப் பெற்று தியாகிகள் மண்டபத்தில் நிறுவினார். புன்னப்புரா-வயலார் வார விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
