70 வயது நிரம்பியோர்க்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக!
சுகாதார போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு கோரிக்கை
கோயம்புத்தூர், ஜூலை 10 – தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிப்படி 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் சங்க முதல் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஓய்வூதி யர் நல சங்கத்தின், முதல் மாநில மாநாடு, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர்கள் சங்க கூட்டரங்கில் மாநில அமைப்பாளர் சோ. நடராஜன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவரும், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவருமான என். அரங்கநாதன் மாநாட்டைத் துவக்கிவைத்து பேசினார். அரசு சுகாதாரப் போக்கு வரத்துத்துறை முன்னாள் பொதுச் செயலாளர் பி. பிரதீஸ்குமார் சிறப்புரையாற்றினார். இதில், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். மதன், சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. ராஜாமணி, மாநிலச் செயலாளர் ந. மணி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; தமிழக அரசு புதிதாக அமைத் துள்ள ஓய்வூதிய ஆலோசனைக் குழுவை திரும்பப் பெறவேண்டும், ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியம் குறித்த தகவலை உடனுக்குடன் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும்; மருத்துவப்படியை மாதம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்; கடந்த காலங்களைப்போல் ஓய்வூதியர் நேர்காணல் பணியினை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்; தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிப்படி, 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்து துறை ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாநி லத் தலைவராக சோ. நடராஜன், பொதுச்செயலாளராக என். இராம சாமி, பொருளாளராக கி. நாக ராஜன் உள்ளிட்ட 11 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து, ஓய்வூதியர் சங்கத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி உரையாற்றி னார். மாநிலம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.