கல்லூரி கலைத் திருவிழாவில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
தஞ்சாவூர், அக்.24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில், கடந்த 16.9.2025 முதல் 7.10.2025 வரை தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட, கல்லூரி கலைத் திருவிழாவின் நிறைவு விழா (அக்.23) வியாழக்கிழமை நடை பெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் படிப்பில் மட்டு மல்லாது, கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழை வழங்கினார். மேலும் 3 மாணவி களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ஊக்கத்தொகை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை பேராசிரி யர்கள் முனைவர் ப. ஜெயக்குமார், முனைவர் இரா. அருண்மொழி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முனைவர் இரா.இராஜவினோதா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பேரா சிரியர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் ர.ராஜ்மோகன் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் நா.பழனிவேலு நன்றி கூறினார்.
