tamilnadu

img

புனல்குளத்தில் மரக்கன்றுகள் நடவு

புனல்குளத்தில் மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடவு செய்யப்பட்டன. மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், சண்முகம், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.