தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று (ஜனவரி 9) நடைபெற்ற கேள்வி நேரத்தில் எஸ்.பி.வேலுமணி, ராஜன் செல்லப்பா, அம்மன் கே அர்ஜுனன், அம்பேத்குமார், ஜெகன் மூர்த்தி, செல்லூர் ராஜ், ஆ.கிருஷ்ணசாமி ஆகிய உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிர மணியன் ஆகியோர் விரிவான பதில் களை அளித்தனர். அவற்றின் முக்கிய அம்சங்கள்:
1. உள்கட்டமைப்பு மேம்பாடு:
- அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-2 முன்னுரிமை அடிப்படையில் விரைவில் தொடங்கப்படும்
- தோப்பூர் வணிக வளாகம் நீர்வழிப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்
2. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள்:
- கோவையில் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வுக்கு சிலை அமைக்கப்படும்
- வந்தவாசி போர் நினைவுச்சின்னம் அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும்
- குடியாத்தம் காந்தி நகரில் தேசியக்கொடி நினைவுச்சின்னம் நிதி நிலைமைக்கேற்ப பரிசீலிக்கப்படும்
- பி.கே.மூக்கையா தேவர் நினைவு திட்டங்கள் அடுத்த ஆண்டு ஆய்வு செய்யப்படும்
3. சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு:
- 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளன
- 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன
- 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் 500 செயல்பாட்டில், மீதி விரைவில் துவங்கப்படும்
- 19 புதிய மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் திறக்கப்பட்டுள்ளன
- ரூ.1,018 கோடியில் மேலும் 5 மருத்துவ மனைகள் தரம் உயர்த்தப்படும்